ஒவ்வொரு உயிருக்கும் அல்லது நபருக்கும் ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டுமே அதிக ஆற்றல் இருக்கும். தங்களுக்குப் பழக்கப்பட்ட, சாதகமான இடத்தில் இருப்பவர்கள் வலிமையாகத் திகழ்வார்கள்.
ஆனால் தங்களுக்குத் தொடர்பில்லாத அல்லது சாதகமற்ற இடத்திற்கு வரும்போது அவர்கள் தங்கள் வலிமையை இழந்துவிடுவார்கள்.
இந்த வகையில் எங்கள் மலையக மக்களின் பலம் அந்த மலையக வாழ்வில்தான். அங்குதான் அவர்கள் ஆற்றல் நிறைந்தவர்களாக காணப்படுவர் உணருவர்.
திருவள்ளுவர் இதே கருத்தை “நெடுபுனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற” (குறள் 495) என்ற குறள் மூலம் விளக்குகிறார்.
அதாவது, ஆழமான நீரில் முதலை மற்ற விலங்குகளை வெல்லும், ஆனால் நீரை விட்டு வெளியே வந்தால் அதன் பலம் ஆற்றல் குறைந்துவிடும் என்பதாகும்.
இலங்கையில் ஏற்பட்ட மழை வெள்ள அனர்தங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசமாக எமது மலையகமே காணப்படுகின்றது.
மலையக மக்கள்தான் அதிக இழப்புகளை துன்பங்களை சந்தித்து இருக்கின்றனர்.

அவர்களின் வாழ்வை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதறகு இலங்கை அரசு தன்னளவில் சரவதேச சமூகத்தின் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் என்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இலங்கையின் எதிர்கட்சி வரிசையில் இருக்கும் இரு அரசியல்வாதிகளின் கருத்து மக்கள் இடையே பெரும் விசனத்துடன் பேசு பொருளாக இருக்கின்றது.
மலையக மக்களும் இதனை வரவேற்கவே இல்லை.
அதற்கான காரணங்கள் என்ன என்பதை தெளிவுபடுத்தவே பல்லவி, அனு பல்லவி போல் பதிவின் ஆரம்பத்தில் ‘பலம்’, ‘ஆற்றல்’ எங்குள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளோம்.
‘புலம் பெயர் தமிழர்கள் காணிகளை வழங்கு முன் வர வேண்டும்’ – மனோ கணேசன்.
அவர் இங்கு குறிப்படுவதும் மலையகத்திற்கு அப்பால் உள்ள தமிழர் பிரதேசங்களைத்தான் அதுவும் சிறப்பாக வட மாகாணத்தைதான்.
‘மலையக மக்களை வரவேற்க வடக்கு கிழக்கு மக்கள் தயார்’ – சுமந்திரன்
மனோ கணேசனுக்கு ஒத்து ஊதுவதைப் போலத்தான் சுமந்திரன் தனது கருத்தையும் உணர முடிகின்றது.
மலையக மக்கள் எங்கு வாழ விரும்புகின்றார்கள் அல்லது அனர்தங்களின் பின்பு போகவிரும்புகின்றார்கள் என்று மலையக மக்கள் அவர்களிடம் கேட்டார்களா?
மலையக மக்கள் மலையகத்தில்தான் வாழ விரும்புகின்றார்கள் வாழ விரும்புவார்கள் என்பது அவர்களின் உயிரோடு கலந்த உணர்வு அது.
இந்தியாவில் இருந்து தலை மன்னார் ஊடாக கொண்டு வரப்பட்டு தாம் செல்லும் பாதைகளை தாமே அமைத்து பல உயிர்களை இழந்து நடையாக மலையகத்திற்கு வந்து சேர்ந்ததுதான் வரலாறு.
அங்கிருந்த காடுகளை களனியாக்கி வளம் கொழிக்கும் அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுக்கும் உழைக்கும் மக்களாக மாறிய 200 வருடத்திற்கு மேற்பட்ட வாழ்வியலைக் கொண்டவர்கள் மலையக மக்கள்.
ஒவ்வொரு மேட்டிலும், காட்டிலும், உச்சியிலும், பள்ளத்தாக்கிலும் செடிகளிலும் கொடிகளிலும் அவர்களின் வேர்வையும் இரத்தமும் கலந்து இருக்கின்றன.
குளிரிலும் மழையிலும் அட்டைக் கடியிலும் லயன் வாழ்விலும் மலையக்தை அழகாக்கிய சிற்பிகள் இவர்கள்.
சரிவுகள் சறுக்கல்கல்கள் புதையுண்டல்கள் என்றாக பலதையும் கடந்துதான் அவர்கள் எழுந்து வந்து ‘எழுக மலையகமே’ என்றாக வாழ்கின்றனர்.
எனவே அவர்கள் எங்கு வாழவேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியும் தீர்மானிக்க வேண்டும்
இந்த இரு அரசியல்வாதிகளின் பேச்சு பண்டா சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி மலையக மக்களின் விருப்புகளைக் கேட்காமல் நாடற்றவர்கள் என்றாக்கி இந்தியாவிற்கு உறவுகளை, மண்ணை, உழைப்பை. ஆவர்களால் உருவாக்கிய வளத்தை பறித்து வாழ்வைப் பறித்து அனுப்பியதற்கு ஒப்பானது.
அப்போது எல்லாம் மலையக புகையிர நிலையங்கள் எங்கும் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டவர்தமது உறவுகளை பிரியமுடியாமல் புகையிரத நிலைய மேடையில் நின்று அழுது குழறிய சத்தங்கள் இன்றும் மலைகளில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
மலையகத்தை விட்டு மக்களை இடம்பெயர்த்து வேறு பகுதிக்கு குடியேற்ற வேண்டி தேவை ஏன் ஏற்படுகின்றது அது வாழ்வதற்குரிய இடம் இல்லையா…?
அங்கு மனிதர்கள் வாழ்வதற்குரிய பாதுகாப்பான இடங்கள் இல்லையா…?
முழு மலையகமும் வாழ்வதற்கு ஏற்ற இடம் இல்லை என்றாக தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் என்றாக அனைவரும் வேறு பகுதியிற்கு சென்றாக வேண்டும் என்பதை இந்த கோரிக்கைளை முன்வைத்தவர்கள் கூட அப்படி இல்லை என்றாகவே பதில் கூறுவர்.
அப்போ மலையகத்தில் மக்கள் வாழ்வதற்குரிய நிலம் பெரிய அளவில் உள்ளது.
அப்போது அந்த நிலங்கள் யாரிடம் இருக்கின்றது…?
வாழ்வதற்குரிய தகுதி குறைந்த மண்சரிவு நிலத்தில் இருக்கும் எளிய மக்களை தூக்கி எறிவதுதான் உங்கள் நோக்கமா..?
பனையால் விழுந்தவரை மாடு எறி மிதிப்பது போன்ற கதையாக அல்வா இது இருக்கின்றது.
மலையகத்தில் வாழ்வதற்குரிய பாதுகாப்பான ஏராளமான நிலம் உண்டு
அது யார் வசம் உண்டு…?
இந்த நிலம் மற்றைய எவரையும் விட அந்த மண்ணை வழமாக்கியவர்களுக்கு அதிக உரிமை உண்டு.
அந்த நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதுவே மீள் கட்டுமானத்தில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இதற்கான வேலை திட்டங்களை கோரிக்கையாக மனோவும் சுமியும் முன் வைத்தலே சரியானது.
இந்த இருவரையும் அவர்கள் வாழும் கொழும்பில் இருந்து இவர்கள் சொல்வதைப் போல் தூக்கி வேறு இடத்தில் அமர்தினால் அவர்களின் மன நிலை என்னாகும்…?
கடந்த காலத்தில் பேரினவாத்தினால் ஏற்பட்ட கலவரங்களால் வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட மலையக மக்கள் இன்னமும் ‘தோட்டக் காட்டான்’ (இந்த சொல்லாடலை பாவிப்பதற்கு மன்னிப்பும் கேட்கின்றேன்) என்றாகவே வாழ்விழந்து வாழ்வது அரவணைகப்படுவதும் இங்கு கவனத்தில் கொண்டாக வேண்டும்.
வவுனியா மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் தற்போது அனேகர் கூலிகளாக வாழும் நிலமைதான் தொடர்கின்றது.
முக்கயமாக போராட்ட காலத்தில் ‘இயக்கம்’ இன் போர் காலத்திலும் அவர்களின் வறுமையை பயன்படுத்தி போர் முனையில் ‘சிப்பாய்களா’ அதிகம் பாவிக்கப்படதே உண்மை.
இன்று வரை அவர்களின் அர்பணிப்பு தியாகம் அதிகம் பேசப்படவில்லை கொண்டாடப்படவில்லை போராளிகளாக.
இதனை இந்த வருடம் மலையகம் சென்ற போது முக்கியமான சந்திப்புகளின் என் மீதும் கேள்விகளா வலிகளுடன் முன்வைத்தார்கள் பலர்.
இந்த வலிகள் அவர்களிடம் இன்றும் உண்டு அவர்களின் போர் முனை இழப்பு மதிக்கப்படவில்லை.
இப்போதும் குடியேற்றவாசிகளாக தர்மபுரத்திலும் கன்னாட்டி நிலமைகள் இதனை விட மோசாகத்தான் இருக்கின்றது.
இது போன்ற வரலாற்று அனுபவங்களில் மத்தியில்தான் சுமந்திரனின் கூற்றை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்
இவை எல்லாவற்றிற்கும் அப்பால் வேலை நிமிர்தம் இடம் பெர்ந்து வாழுதல் என்பது வேறு.
மற்றயபடி மலையகத்தின் தட்ப வெபப நிலையில், ஏற்ற இறக்கம் என்றான பாதைகளில் வாழ்ந்தவர்களை திருச்சியின் சிலோன் காலனி போன்ற தரைப் பிரதேசத்தில் குடியேற்றிவர்களின் வாழ்க்கை எவ்வளவு வருத்தங்கள் துன்பங்கள் நிறைந்தாக இன்றும் இருக்கின்றது என்பதை ஒரு தடவை அங்கு சென்று பார்த்தால் புரியும்.
இது ‘நீரில் வாழும் மீனை தரை எடுத்து வீசி அங்கு வாழு…!’ என்று கேட்பதற்கு அண்மையானது அல்லது அடுப்பு மேடையில் வாழும் பூனையை எடுத்து கடகத்திற்குள் பட்டுப் பீதாம்பரத்தை போட்டு ‘இதற்குள் படுடா…’ என்றாலும் பூனை அடுப்பு மேமையில் படுக்கவே விரும்பும் இந்த நுண் உள்ளுணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை எந்த மக்களும் தாம் விரும்பும் இடத்திற்கு இடம்பெயர்ந்து வாழுதல் என்பதுடன் ஒப்பட முடியாது அதனை அவர்களாவே தீர்மானிக்கலாம்… தீர்மானிக்கட்டும் மாறாக திணிக்க முடியாது.
பெண்ணிற்கு தாய்மையே பலம்
ஆணிற்கு தாங்குவதே பலம்
மாணவருக்கு படிப்பே பலம்
எழுத்தாளருக்கு பேனாவே பலம்
ஓவியருக்கு தூரிகையே பலம்
காதலருக்கு கண்ணியமே பலம்
பாடகருக்கு குரல் பலம்
இசைஞருக்கு விரல் பலம்
அரசியல்வாதிக்கு மேடைப்பேச்சு பலம்
பேச்சாளனுக்கு மக்கள்தான் பலம்
புலிக்கு பாய்ச்சல் பலம்
பூனைக்கு சீறல் பலம்
குயிக்கு குரல் பலம்
மயிலுக்கு தோகை பலம்
மலையக மக்களுக்கு மலையகமே பலம் அவர்களின் உழைப்பே பலம் அதுவே நாட்டிற்கான பெரும் ஆற்றலும் கூட.
[இறுதியாக நம்பிக்கை தரும் செய்தியாக ஒரு வரலாற்றுக் குறிப்பைத் தருகின்றேன்…
நவம்பர் 1, 1755 அன்று உள்ளூர் நேரப்படி காலை 09:40 மணிக்கு லிஸ்பன்(Lisbon)(போத்துக்கல் தலைநகரம்) நிலநடுக்கம் (கிரேட் லிஸ்பன் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது)ஏற்பட்டது.
இது வரலாற்றில் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக உள்ளது, நில அதிர்வு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ மற்றும் பாரிய சுனாமி ஆகியவற்றின் கலவையான் அனர்தங்களால் லிஸ்பன் கிட்டத்தட்ட முழுமையாக அழித்துவிட்டது.
அப்போது நாட்டை ஆண்ட மன்னர் ஜோசப்(King Joseph I) அந்த நேரத்தில் நகரத்தில் இல்லாது இருந்ததால் பூகம்பத்திலிருந்து தப்பினார். ஆனால் இந்த நிகழ்வால் அதிர்ச்சியடைந்தார் அவர்.
கடுமையான கிளாஸ்ட்ரோபோபியாவை(Claustrophobia) உருவாக்கி, தனது வாழ்நாள் முழுவதையும் அஜுடா(Ajuda) மலைகளில் உள்ள ஆடம்பரமாக அமைக்கப்பட்ட கூடாரத்தில்(Complex of luxurious tents) வாழ்ந்து வந்தார் அழிவுகளை கண்ணுற்ற அவர் பயத்தினால் சுவர்களால் சூழப்பட்ட கல் கட்டிடங்களில் வாழ மறுத்துவிட்டார்.
கூடவே இனி லிஸ்பன் மக்கள் வாழ்வதற்குரிய இடம் அல்ல என்றாக அறிவித்து வேறு ஒரு இடத்தில் தலை நகரை அமைதது மக்களை குடியேற்றுமாறு அறிவுரை கூறினார்.
ஆனால் பாம்பலின் மார்க்விஸ்(Marquis of Pombal) என்பவர்(மன்னரால் கிட்டத்தட்ட முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டவர்) பேரழிவில் “இறந்தவர்களை அடக்கம் செய்து உயிருள்ளவர்களை குணப்படுத்துங்கள்” என்று கூறி நம்பிக்கையாக அறை கூவல் விடுத்தார்.
நகரின் மத்திய மாவட்டத்தின் குப்பைகளை அகற்றுதல், அனர்த்த நிவாரணம் மற்றும் புரட்சிகரமான சுத்தமான நகரம், மறுகட்டமைப்பு ஆகியவற்றை அவர் ஏற்பாடு செய்தார்.
இவருக்கு எல்லா வகையிலும் களத்தில் நின்று செயற்படும் வீரராக மானுவல் டா மியா(Manuel da Maia) செயற்பட்டார்.
பல்வேறு புனரமைப்புத் திட்டங்களை வடிவமைத்த தலைமை இராணுவ பொறியாளர் இவர். இறுதியில் பைக்சா பொம்பலினா(Praça do Comércio (Commerce Square)) (Down Town) க்கான நவீன கட்டம்(modern grid-based layout) சார்ந்த அமைப்பைத் தேர்ந்தெடுத்தார்.
இதன் அடிப்படையிலான கட்டங்களை அமைத்து இன்று லிஸ்பன் தொடர்ந்தும் போத்துக்கல்லின் தலை நகராக எழுந்துதான் நிற்கின்றது.
(இந்த வரலாற்றை சில வருடங்களுக்கு முன்பு போத்துகல் சென்ற போது ஆதாரங்களுடன் நேரில் கண்ணுற்றேன். சமான்ய மக்களின் மனதில் இந்த நம்பிக்கைதான் இன்றும் அங்கு மேலோங்கி நிற்கின்றது)
இதுதான் இன்று மலையகத்திற்கும் தேவையாக உள்ளது.
{ ஈழ விடுதலைப் போராட்ட காலத்து அனுபவங்களை இரு போராளிகள் என் பதிவில் பேசி உள்ளார்கள் அதனை இங்கு தேவை கருதி இணைக்கின்றேன். இவை நிச்சயமாக அண்மைய அனர்த்த நிகழ்வுகள் மீள் கட்டுமானம் என்பன நடைபெறும் காலத்திற்கு பலம் சேர்க்கும் என்று நம்புகின்றேன்.
- இவர் ஈழவிடுதலைப் போராளி தோழர் நாபாவுடன் நெருக்கமாக பயணித்தவர் தமிழ்நாடு கும்ப கோணத்தை பிறப்பிடமாக கொண்டவர்.
Desikan Rajagopalan —-> தமிழ் நாட்டில் இவ்வாறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வந்தவர்கள் மத்தியிலும் இலங்கை மலை நாட்டிலும் தோழர் பத்மநாபா வேலை செய்த செய்திகளை நாம் அறிவோம். இதற்கும் அப்பால் அவர்களை இணைத்து(தமிழகத்திலும்) போராட்டம் நடாத்தி வாழ்வியலை உறுத்திபடுத்தி அந்த மகத்தான் தோழரின் சிந்தனைதான் எம்மிடம் உள்ளதினால் என் பதிவும் அதனைச் சார்ந்து அமைந்தாக உணர்கின்றேன் இதனைத்தான் மரணத்தின் பின்பு வாழ்வு உண்டு என்பார்கள். தோழர் நாபா உயிருடன் இருந்திருந்தால் இன்று வரை அனர்த்தங்களின் பின்பு மலையகத்தில் முகாம் இட்டு அந்த மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் களப்பணியைத்தான் ஆற்றி இருப்பார். பொருத்தமான நேரத்தில் அவரின் செயற்பாடுகளை இங்கு கொண்டு வந்தமை மிகச் சிறப்பு உங்கள் தகவலை என் பதிவில் இணைக்கின்றேன் நன்றி தோழரே.
- இவர் ஈழவிடுதலைப் போராளி தோழர் நாபாவுடன் நெருக்கமாக பயணித்தவர். மலையகத்தை பிறப்பிடமாக கொண்டவர் தற்போல் 50 வருடங்களாக கன்னாட்டில் வாழும் மூத்த போராளி.
Paranthaman Paranthaman —–> தமிழ் நாட்டில் இவ்வாறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வந்தவர்கள் மத்தியிலும் இலங்கை மலை நாட்டிலும் தோழர் பத்மநாபா வேலை செய்த செய்திகளை நாம் அறிவோம். இதற்கும் அப்பால் அவர்களை இணைத்து(தமிழகத்திலும்) போராட்டம் நடாத்தி வாழ்வியலை உறுத்திபடுத்தி அந்த மகத்தான் தோழரின் சிந்தனைதான் எம்மிடம் உள்ளதினால் என் பதிவும் அதனைச் சார்ந்து அமைந்தாக உணர்கின்றேன் இதனைத்தான் மரணத்தின் பின்பு வாழ்வு உண்டு என்பார்கள். தோழர் நாபா உயிருடன் இருந்திருந்தால் இன்று வரை அனர்த்தங்களின் பின்பு மலையகத்தில் முகாம் இட்டு அந்த மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் களப்பணியைத்தான் ஆற்றி இருப்பார். பொருத்தமான நேரத்தில் அவரின் செயற்பாடுகளை இங்கு கொண்டு வந்தமை மிகச் சிறப்பு உங்கள் தகவலை என் பதிவில் இணைக்கின்றேன் நன்றி தோழரே}