அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நேட்டோ

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதம்  6, 7ஆம் திகதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg, தலைமையில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அவுஸ்திரேலியா, பின்லாந்து, ஜார்ஜியா, ஜப்பான், நியூசிலாந்து, சுவீடன், கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து 30 நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் கூட்டம் கூட்டப்படுவது இது 2 ஆவது முறையாகும்.

சில அமைச்சர்கள் வீடியோ இணைப்பு மூலம் கலந்து கொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.