அமெரிக்காவில் 33 ஆண்டுக்கு பிறகு அணு ஆயுத சோதனை

 இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இதர நாடுகளைவிட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. எனது முதல் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் புதுப்பிக்கப்பட்டன.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு 33 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த அறிவுறுத்தி உள்ளேன். இதன்படி அமெரிக்காவில் விரைவில் அணு ஆயுத சோதனை தொடங்கும்.

அதிக அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2 ஆவது இடத்தில் ரஷ்யா, 3 ஆவது இடத்தில் சீனா உள்ளன. அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்படும் என்பதை நன்கறிவேன். அணு ஆயுத சோதனைகளை நடத்த நான் விரும்பவில்லை. ஆனால் இதர நாடுகள் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் சூழலில் அமெரிக்காவிலும் அணு ஆயுத சோதனை நடத்த போர் துறையை அறிவுறுத்தி உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.