‘அமைதி நடைப்பயணம்’: கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து

இந்நிகழ்வை முன்னிட்டு, கொழும்பு போக்குவரத்துப் பிரிவினர் அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளனர்.

 நாளை (2026.04.28) காலை 11:00 மணி முதல், சூழலுக்கு ஏற்பப் பின்வரும் வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்:

  • பண்டாரநாயக்க வளைவிலிருந்து பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை
  • மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வார்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை.
  • எஃப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ்.
  • சுதந்திர மாவத்தை, பிரேம்சிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ், மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலகச் சந்தி.
  • ப்ளவர் வீதி, பித்தளைச் சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபில் வீதி மற்றும் கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள்.

  இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply