இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இதனையடுத்து இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று (26) நேரடியாக வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.
தகுதியுடைய முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இன்று முதல் தத்தமது வங்கிக் கணக்குகளின் ஊடாக ‘அஸ்வெசும’ நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.