இதை செய்யுங்கள்… அனுரவுக்கு ஹக்கீம் கடிதம்

இலங்கை சுதந்திரமடைந்த தற்குப் பின்னர் முழு நாட்டையும் கடுமையாக பாதித்த மிகப் பெரும் பேரழிவாக இது அமைந்துள்ளதாகவும்,  வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சேதமடைந்த உடைமைகளைச் சுத்தம் செய்து சீரமைக்க அதிக அளவில் தண்ணீரும், மின்சாரமும் பயன்படுத்தப்பட. வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 பொருளாதாரத்திலும் ,உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வாழ்க்கை முன்கொண்டு செல்ல உதவும் நோக்கத்தில், 2025 டிசம்பர் மாதத்திற்குரிய நீர் மற்றும் மின்சார கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறும் கோரியுள்ளார்.