இந்தியா: உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

இந்தியாவில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றின் பரவலானது தீவிரமடைந்துவருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை நிலவிவருகின்றது. குறிப்பாக வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பற்றாக்குறை காணப்படுவதால் வைத்தியசாலைகள் அண்மைக்காலமாகத் திணறிவருகின்றன. இந் நிலையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரிங்லா தெரிவித்துள்ளார்.