150 mm–ஐ கடந்த மழை = Red Alert (Evacuation)அதாவது: உடனடி வெளியேற்றம் செய்ய வேண்டிய நிலை! ஒன்றாம் நிலை இல்லை… இரண்டாம் நிலை இல்லை… நேராக Red Zone!
Red Zone (வெளியேற்றம் அவசியம்)ஸ்ரீலங்காவின் இதயம் —கண்டி, நுவரேலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி பல பிரதேசங்கள்முழுவதும் தீச்சிவப்பு நிறத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது.(See the Red Cluster in Map — PDF Page 7)மிகவும் சிவப்பு அபாயத்தில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகள்: கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 150 மி.மீ களை மேவியுள்ளதனால்- மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு இடிந்து விழுகை, பாறை விழுகை, நிலவெட்டுசாய்வு இடிந்து விழுகை மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவற்றின் அபாயங்களை தவிர்ப்பதற்காக பாதுகாப்பான பகுதிகளுக்கு “உடனடியாக” வெளியேறவும்.
இந்தப் பிரதேசங்களில் மலைப்பாங்கான பகுதியில், வெட்டப்பட்ட நிலச்சாய்வுப் பகுதியில், NBRO இனால் முன்னர் அபாயப்பகுதி என்று அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்தால் நீங்கள் கட்டாயம் இதை கவனிக்க வேண்டும்.
கண்டி (Kandy)Panvila, Udapalatha, Minipe, Poojapitiya, Ududumbara, Thumpane, Medadumbara, Yatinuwara, Pathadumbara, Kundasale… நுவரேலியா (N’Eliya)Walapane, Hanguranketha, Ambagamuwa Korale, Kothmale East/West, Norwood…கேகாலை (Kegalle)Deraniyagala, Yatiyanthota, Aranayaka, Mawanella, Bulathkohupitiya…இரத்தினபுரி (Ratnapura)Eheliyagoda, Kalawana, Balangoda, Kuruwita, Nivithigala…(Ref: Pages 3–5 of report) Amber Alert (அவசர கண்காணிப்பு)குருநாகல், மாத்தளை, உடுமலைப் பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 100 மி.மீ களை மேவியுள்ளதனால்- மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு இடிந்து- விழுகை, பாறை-விழுகை, நிலவெட்டுசாய்வு இடிந்து-விழுகை மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவற்றின் சாத்தியங்களையிட்டு எச்சரிக்கையுடன் தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் தயார் நிலையில் இருக்கவும்.
Yellow Alert (கவனத்தில் இருங்கள்):கம்பஹா, உவா பரணகம, ஹாலி எலா, வெலிமடை ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 75 மி.மீ மழைவீழ்ச்சி மேவியுள்ளதனால்- மழை தொடருமாயின் மண்சரிவு, சாய்வு இடிந்து விழுகை, பாறை விழுகை, நிலவெட்டுசாய்வு இடிந்து விழுகை மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவற்றின் சாத்தியங்களுக்கான அவதானிப்புடன் இருக்கவும்.
மண் சரிவு வரப்போகும் முக்கிய அறிகுறிகள்(NBRO Report Page 6) தரையில் பிளவுகள் தோன்றுதல் சுவர்கள்/தரை விரிசல்கள் மின் கம்பங்கள், மரங்கள் சாய ஆரம்பித்தல் திடீர் நீரூற்று பொங்கி வருதல் நிலம் தாழ்வடைதல் வீடுகளின் பின்புற சரிவுகளில் சேறும் நீரும் தோன்றுதல்இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்:அந்த இடத்திலிருந்து உடனே வெளியேறவும்.
பெரும் மழை தொடர்ந்தால் — உயிர் பாயும் அபாயம்NBRO சொல்லுவது மிக தெளிவாக:“மழை தொடர்ந்தால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும்.”(Report Page 6)
இந்த செய்தியை ஒரு Share-ஆக அல்ல, உயிர் காப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்!
மலைநாடு முழுவதும்: மண்ணும் நகர்கிறது மலைகளும் குலுங்குகிறது தரை தாழ்வடைகிறது நீரழுத்தம் அதிகரிக்கிறதுஇது சாதாரண எச்சரிக்கை அல்ல.இன்று உயிர்—பாதுகாப்பு நாள்.
நீங்கள் செய்ய வேண்டியது (இப்போது): உயர் அபாய பிரதேசங்களில் இரவு தங்க வேண்டாம் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் — பாதுகாப்பான இடத்துக்கு மாற்றவும் அருகிலுள்ள உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கவும் சரிவுகள் உள்ள சாலைகளில் பயணம் செய்ய வேண்டாம்
Emergency: 117 அழைக்கவும்.
உங்கள் ஒரு Share = ஒருவரின் உயிர்இன்று இந்த தகவல் பரவணும். இது ஒரு பதிவல்ல… ஒரு உயிர் எச்சரிக்கை.