ரஷ்யாவும் சில ஐரோப்பிய நாடுகளும் ஈரான் நாட்டிலிருந்து தங்களது தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் திரும்பப் பெற்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தங்களது குடிமக்களை உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களிலிருந்தும் படைகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. ஈரானைத் தாக்குவதே ட்ரம்பின் நோக்கம் என்பது இப்போது மேலும் தெளிவாகியுள்ளது.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, அங்கு ஒரு ஏகாதிபத்திய பொம்மை ஆட்சியை நிறுவுவதே அமெரிக்காவின் இலக்காகும்.
மேற்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாத ஒரு அரசாங்கம் ஈரானில் உள்ளது. பல குறைகள் இருந்தாலும், பல மேற்கத்திய நாடுகளை விடச் சிறந்த ஜனநாயக அரசியல் அமைப்பும், அரசியலமைப்பு நிறுவனங்களும் அங்கு உள்ளன.
1979 முதல் அமெரிக்கக் கூட்டணி ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளே அந்நாட்டு மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை நெருக்கடிகளுக்குப் பிரதானக் காரணமாகும்.
தற்போது ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டணியால் தூண்டிவிடப்பட்டுள்ள உள்நாட்டுக் குழப்பங்களுக்கும், கொலைகளுக்கும் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகள் யார் என்பதை ஈரான் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அவர்கள் உலகளாவிய அகங்காரவாதியான ட்ரம்பும், அறிவிக்கப்பட்ட சர்வதேசக் குற்றவாளியான நெதன்யாகுவும் தான். அவர்கள் தான் போருக்கான முரசைக் கொட்டுபவர்கள்.
எந்தவொரு அமெரிக்கத் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள ஈரான் ராணுவத்திற்கு ‘உயர்ந்தபட்ச எச்சரிக்கை’ (High Alert) விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.