மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (16) அன்று நடைபெற்றகூட்டத்திற்கு ஏறாவூர் பற்றுசெங்கலடி பிரதேச சபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் ஆகியோர் தங்களது சபைகளில் கழிவுகள் ஏற்றும் உழவு இயந்திரங்களில் சமூகமளித்திருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் பிரதேச சபையின் தவிசாளருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனம் கிழக்கு மாகாண பிரதம செயலகத்தினால் மீள பெறப்பட்டுள்ளது.
இதை நாங்கள் பழிவாங்கும் நோக்கமாகவே கருதுகின்றோம். எமக்கு கூட்டத்திற்கு செல்வதற்கு வாகனம் இல்லாத காரணத்தினால் தங்களது சபைக்குச் சொந்தமான கழிவு ஏற்றும் உழவு இயந்திரத்தில் கூட்டத்திற்கு வந்துள்ளேன் என்றார்.