நுகேகொடையில் உள்ள தனியார் கல்விக்கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொருளியல் மாதிரி வினாத்தாளில் முதலாம் வினாத்தாளில் 27 கேள்விகள், உயர்தரப் பொருளியல் வினாத்தாளில் 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.
“இது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
கொழும்பில் உள்ள மாணவர்கள் போல கிராமங்களில் உள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பைப் பெறாததால், இதுபோன்ற வினாத்தாளின் மூலம் பாகுபாடு காட்டப்படுவதாக அவர் கூறினார். கிராமங்களில் உள்ள மாணவர்கள் நுகேகொடைக்கு வரமுடியாது. அது சாத்தியப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.