எல்ல விபத்து; மீட்பு பணிகளில் ஹெலிகள்

திடீரென்று பேருந்தை நிறுத்த தொடங்கிய போது எனக்கு உண்மையில் பிரச்சினை இருப்பது தெரிந்தது. நான் இன்ஜின்பகுதி மேல் இருந்தேன் நான் அப்போதே முடிந்துவிட்டேன் என நினைத்தேன். நான் சுயநினைவு பெற்று கண்களைத் திறந்தபோது நான் உயிருடன் இருக்கிறேன் என எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் கருத்து தெரிவித்துள்ளார்

எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும், இலங்கை விமானப்படை தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஒரு ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் ஒரு MI-17 ஹெலிகாப்டரையும், வீரவில விமானப்படை தளத்தில் மருத்துவ பணியாளர்களுடன் ஒரு பெல் 412 ஹெலிகாப்டரையும் நிறுத்தியுள்ளது.

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது