ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரித்தானியா

உத்தியோகபூர்வமாக கடந்தாண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக வெளியேறியபோதும், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியுடனேயே மேற்படி வெளியேற்றம் இடம்பெற்றிருந்தது.

1973ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிர்ரித்தானியா இணைந்திருந்தது.

பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் பிற்பாடான வர்த்தக ஒப்பந்தத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் அங்கிகரித்திருந்தனர்.

ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 521 – 73 என்ற வாக்குகள் ரீதியில் வாக்களிக்கப்பட்டிருந்தது.

இச்சட்டமூலத்துக்கு இறுதி அனுமதியை பிரித்தானியாவின் இராணி எலிஸபெத் வழங்கியிருந்தார்.

இவ்வொப்பந்தமானது ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்துடன் இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.