ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்குமிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் புதன்கிழமை (07) இடம்பெற்றது.
இதன்போது, காத்தான்குடி நகர சபையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான முக்கிய விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து வட்டாரங்களையும் வெற்றி கொண்டு பத்து ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் கட்சி ஒரு ஆசனத்தை பட்டியல் மூலம் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.