கியூபாவிற்கு கரம் கொடுக்கும் ரஸ்யா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கியூபா மீது விதித்துள்ள கடும் “எரிசக்தி முற்றுகை” காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக கியூபாவிற்கு எந்த எண்ணெய் கப்பல்களும் வராத நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதலாவது ரஷ்யக் கப்பலான ‘அனடோலி கொலோட்கின்’ (Anatoly Kolodkin) வெற்றிகரமாக மதன்சாஸ் (Matanzas) துறைமுகத்தை வந்தடைந்தது. 7,30,000 பேரல் கச்சா எண்ணெயுடன் வந்த இந்த முதல் கப்பலைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது கப்பலில் எண்ணெய் ஏற்றப்பட்டு வருவதாகவும், கியூபாவை இக்கட்டான நிலையில் தனித்து விடமாட்டோம் என்றும் ரஷ்யா உறுதியளித்துள்ளது.வெனிசுலாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் மெக்சிகோவின் எண்ணெய் விநியோக நிறுத்தம் காரணமாக கியூபா கடும் மின்சாரத் தட்டுப்பாட்டையும், உணவுப் பொருள் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டு வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த உதவி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.