குருந்தூர் மலையில் கைதாகிய விவசாயிகளை விடுவிக்க உத்தரவு

இந்நிலையில் குறித்த வழக்கு வியாழக்கிழமை (05) அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களான விவசாயிகள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவிக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

முல்லைத்தீவு  மாவட்ட  நீதிபதி த. பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு தொடுனர்கள் சார்பில் முல்லைத்தீவு பொலிஸார் , தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணி ஒருவரும் ஆஜராகி இருந்தனர் 

இதேவேளையில் சந்தேக நபர்கள் சார்பாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த 12க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்

நீதிபதி தனது கட்டளையில்  விசேடமாக, குறித்த சந்தேக நபர்கள் மீது வழக்கை தொடர்ந்து நடத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை எனவும், குறித்த பிரதேசம் இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பிரதேசம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத்தொடுனர் தரப்பே  ஏற்றுக்கொண்டதை விசேடமாகக் குறிப்பிட்டு இருவரையும் விடுவித்த தோடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது