நாட்டில் கேரளாவில் அதிகபட்ச தொற்று உள்ளது. அங்கு 1435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் 506 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் 483 பேரும், குஜராத்தில் 338 பேரும், கர்நாடகத்தில் 253 பேரும், தமிழ்நாட்டில் 189 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 157 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். புதுச்சேரியில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முந்தைய தினத்தைவிட திங்கட்கிழமை (2) பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போதைய கொரோனா பரவலில் உயிர்ப்பலி எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.