சீனாவை உலுக்கும் கொரோனா: தகவல்களை பகிருமாறு WHO அறிவிப்பு

கடந்த சில வாரங்களாக சீனா பல கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. 

 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளோர் மற்றும் மரணங்கள் பற்றிய மேலதிக தகவல்களையும் தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் WHO அதிகாரிகள் பார்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். 

அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட் பரிசோதனைகளை கட்டாயமாக்கியுள்ளன.

அங்கிருந்து வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்று அவர்கள் அஞ்சுவதாகவும் சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் எதிர்மறை பரிசோதனை முடிவை பெறவேண்டும் என்று அந்த நாடு குறிப்பிட்டுள்ளது.

கடுமையான பொது முடகத்தை அமுல்படுத்தியருந்த சீனா திடீரென்று முடக்கத்தையும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் இரத்துச் செய்துள்ளது என சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

5 ஆயிரம் பேர் வரை தொற்றுக்கு உள்ளாவதாக சீனா அறிக்கையிடுகின்ற போதும் சீனர்கள் வெளிநாடு செல்ல சுதந்திரமாக அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனா வெளியிடும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மிகவும் குறைவாக கணக்கிடப்படுவதாகவும் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் நாளாந்தம் தொற்றுக்கு உள்ளாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கொவிட் காரணமாக 13 பேர் மாத்திரமே டிசெம்பர் மாதத்தில் மரணமடைந்துள்ளதாக சீனா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதும், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சுகாதார தரவு நிறுவனமான ஏர்ஃபினிட்டி சீனாவில் சுமார் 9,000 பேர் இந்த நோய்த்தொற்றால் நாளாந்தம் மரணமடைவதாக அறிக்கையிட்டுள்ளது.