செம்மணியில் இதுவரை 52 எலும்புகூடுகள் அடையாளம்

இதேவேளை மனித புதைகுழி அகழும் இடத்தில் துணிகளை ஒத்த சில பொருட்களும் அடையாளம் காணப்பட்டது.

அத்துடன் செய்மதிப் படம் மூலம் அடையாளம் காணப்பட்ட பகுதியிலும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர்,தடயவியல் பொலிஸார்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையின் ஊழியர்கள் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்டனர்.