செம்மணி: கைக்குழந்தைகளின் எலும்பு கூடுகளும் மீட்பு

அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு , அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் , இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை வெற்று உடல்களாகவே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.