ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.