லொட்டே நியூயோர்க் அரண்மனை ஹோட்டலில் ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் (UNGA) 80வது அமர்வில் பங்கேற்க நியூயோர்க்கில் உள்ள அரச தலைவர்களுக்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் (BBNJ) பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, பிரான்ஸ் அரசாங்கம் சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.