ட்ரம்பின் தேர்தல் தோல்வியை இல்லாமல் செய்ய 17 மாநிலங்கள் ஆதரவு

ஜோர்ஜியா, மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கோஸினுக்கெதிராக குடியரசுக் கட்சியால் ஆளப்படும் டெக்ஸாஸால் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தன்னை தலையிட அனுமதிக்குமாறும், வாதியொருவராக மாற அனுமதிக்குமாறும் வழக்கொன்றை உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, இவ்வழக்கை விசாரணை செய்யுமாறு 17 மாநிலங்களின் வழக்கறிஞர்கள் நீதியரசர்களை வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கானது வெற்றி பெறுவதற்கு குறைந்த வாய்ப்பே காணப்படுவதாகவும், சட்டவலுவைக் கொண்டிருக்கவில்லை என தேர்தல் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெக்ஸாஸுடன் மிஸூரி, அலபாமா, அர்கன்ஸாஸ், புளோரிடா, இந்தியானா, கன்ஸாஸ், லூசியானா, மிஸிஸுப்பி, மொன்டானா, நெப்ரஸ்கா, வட டகோட்டா, ஒக்லஹோமா, தென் கரோலினா, தென் டகோட்டா, டெனெஸி, உட்டா, மேற்கு வேர்ஜினியா ஆகிய மாநிலங்களே இணைந்துள்ளன. இதில், மூன்று மாநிலங்களில் குடியரசுக்கட்சி ஆளுநர்கள் காணப்படுகின்றனர்.