தகவல் தெரிந்தவர்ஙள் அறிவிக்கவும்

சடலமாக மீட்கப்பட்ட நபர் பஸ் ஒன்றில் வருகை தந்ததாகவும்,சுகவீனமுற்ற நிலையில் இவரை புறக்கோட்டை பிரதான பஸ்தரிப்பிடத்தில் பஸ் நடத்துனர் ஒருவர் இறக்கிவிட்டு சென்ற நிலையில் குறித்த நபர் தடுமாற்றத்துடன் தேனீர் கடை ஒன்றின் அருகில் காணப்பட்ட கதிரையில் அமர்ந்தவாறு உயிரிழ்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டேம்ஸ்டீட் பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை உயிரிழந்த நபரின் ஊர்,பெயர் போன்ற தகவலை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.