தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிக ளுக்கு தமிழ்மக்கள் பேரவை குந்தகம் விளை விக்குமா னால் அது தமிழ் மக்களுக்கு செய்யப்படும் துரோகமாகும் என இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார்.
அதே வேளை பேரவையின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்லர் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் தடையாக இருக்காது எனவும் மாவை சேனாதிராசா அறிவித் துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு பேரவை ஓர் தீர்வுத்திட்டத்தை முன் வைத்தால் அது குறித்து பரிசீலீக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.


திரு. சுமந்திரன் அவர்களோ தமிழ் மக்கள் பேரவை ஒரு ஜனநாயக விரோதக் கூட்டு இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் மக்களால் அங்கீகரிக் கப்படாத அரசியல் நிலைப்பாடுகளை முன்னே கொண்டு வருவதற்கான ஓர் முயற்சியே என விமர்ச்சித்துள்ளார்.
திரு சேனாதிராசா அவர்கள் தமிழ்மக்கள் பேரவையின் ஜனநாயக பூர்வமான கருத்துகளை அவதானத்திற்கு எடுத்துக்கொள்ளத் தயராக இருப்பதாக கூறுகின்றபோது சுமந்திரன் அவர்கள் அந்தப் பேரவை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள எதுவுமே இல்லை என்றும் அவ்வா றான எந்த தேவையும் தமக்கு இல்லை என்றும் கூறி யுள்ளார்.