தி.மு.க 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி: ஸ்டாலின்

உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்” என திராவிட முன்னேற்றக் கழகத் (தி.மு.க) தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்