தோழர் சுமித்

எவருடன் பழகுகையிலும் நெகிழ வைக்கும் பண்பு. அன்புத் தோழன் இவ்வுலக வாழ்விலிருந்து விடை பெற்றதை ஏற்க மனம் மறுக்கிறது.

ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்பனவற்றிற்கு ஒரு மனித வடிவமாக இருந்தவர்.

தோழர் பத்மநாபா மீது மிகப் பெரும் மரியாதை கொண்டிருந்த தோழர். தோழர் கேதீஸ் டெல்லி சென்ற வேளை தோழர் சுமித்தை சந்திக்காத, உரையாடாத ஒரு தடவை கூட இருக்கமாட்டாது.

இலங்கையின் அரசியல் நிகழ்வுகளை, மாற்றங்களை மிக ஆர்வமாக அவதானிப்பவர். இந்திய இலங்கை நல்லுறவில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அதேவேளை இலங்கையின் இன முரண்பாட்டிற்கான தீர்விலும் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார்.

அவர் இப்பூமியின் நிலப்பரப்பில் இருந்து விடை பெற்று விட்டாலும் அவர் மீதான அன்பும் தோழமையும் எம் நெஞ்சில் நிரந்தரமாக நிலைத்திருக்கும். எம்மிடமிருந்து விடைபெறும் தோழா, உமக்கு எமது தலை தாழ்த்தி, கை முட்டியை உயர்த்தியபடி செவ்வஞ்சலிகள்.