அதைத்தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடையும் நக்சல்களின் மறுவாழ்வுக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது.
இ்ந்தநிலையில், சுக்மாவில் காப்புக்காடுகள் அருகே உள்ள பதேசட்டி கிராமத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த நக்சல்கள் 11 பேர் மத்திய ரிசர்வ் படை போலீசாரிடம், சனிக்கிழமை (19) சரணடைந்தனர்.
இதன்மூலம் அந்த கிராமத்தில் நக்சல் ஆதிக்கம் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது.
மேலும் சத்தீஷ்காரில் நக்சல்கள் இல்லாத முதல் கிராமமாக பதேசட்டியை மாநில பொலிஸார் அறிவித்தனர்.
அந்த கிராமத்தை மேம்படுத்த ரூ.1 கோடிக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.