பிஹாரின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் சாம்ராட் சவுத்ரி

சாம்ராட் சவுத்ரி மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சகத்தை தன்வசம் வைத்துக் கொண்டதோடு, 29 துறைகளின் கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

உள்துறையை வைத்துக்கொள்வதன் மூலம், சட்டம் – ஒழுங்கு, பொலிஸ் நிர்வாகம் மற்றும் மாநிலப் பாதுகாப்பு ஆகியவற்றின் நேரடிக் கண்காணிப்பை சவுத்ரி மேற்கொள்கிறார். வேளாண்மை, சுகாதாரம், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு உள்ளிட்டவை அவரது கூடுதல் துறைகளாகும்.

நேற்று மாலை லோக் பவனில் நடந்த நிகழ்ச்சியில், பிஹார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் சாம்ராட் சவுத்ரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களான விஜய் குமார் சவுத்ரி மற்றும் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர் பிஹார் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.

துணை முதல்வர் விஜய் குமார் சவுத்ரிக்கு, உள்கட்டமைப்பு, நீர்வளம், சிறுபான்மையினர் நலன், கல்வி, உயர்கல்வி, போக்குவரத்து மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பத்து துறைகள் ஒதுக்கப்பட்டன. பிஜேந்திர பிரசாத் யாதவுக்கு எரிசக்தி மற்றும் நிதி உள்ளிட்ட 8 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply