புதன்கிழமைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டு

அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதாலும், பாடசாலை மாணவர்களின் வரவு இல்லாததாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டார்.

அத்துடன், புதன்கிழமைகளில் பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு தனியார் துறையினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை வர்த்தகச் சபை மற்றும் இலங்கையின் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இயலுமானவரை தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் (Work-from-home) வசதிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது போக்குவரத்திற்கான கேள்வி பெருமளவு குறையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“இதன் விளைவாக பொதுப் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவமனைக்கு  செல்லுதல் போன்ற அவசரத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என சந்திரகீர்த்தி வலியுறுத்தினார்.

புதன்கிழமைகளில் மக்களின் நடமாட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், வரையறுக்கப்பட்ட போக்குவரத்து சேவைகள் மிகவும் அவசியமான நோக்கங்களுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.