பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சி எம்.பி.ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நீதிமன்றத்துக்கு நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதற்கு அமைச்சரவையில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரையில் அரச நிர்வாக கட்டமைப்பின் ஊடாக எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்றார்.