எப்படி நடந்தது, புலிகள் இயக்கத்தின் பிரதித்தலைவர் மாத்தையா இந்திய உளவு அமைப்பான றோ உடன் துணையுடன் பிரபாகரனை படுகொலை முயற்சி செய்ததாக மாத்தையா உட்பட மேல்மட்ட உறுப்பினர்களான இஞ்சினியர் சுசிலன் உட்படகிட்டத்தட்ட 250 புலி உறுப்பினர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் வடமராட்சியைச் சேர்ந்த சுசிலனின் சகோதரர் இயக்க விடயம் காரணமாக கனடாவில் இருந்து சகோதரரை சந்திக்க வன்னி சென்று இருந்தார்.
அப்போது புலிகள் இயக்கத்துக்குள் மாத்தையா பிரச்சினை நடந்து கொண்டிருந்தது அந்தவேளையில் சுசிலன் பயமோ பதற்றமோ இல்லாமல் இருந்தாராம்.
அதுமட்டுமல்ல நான் தலைவருக்கும் இயக்கத்திற்கும் விசுவாசமாகத்தான் இருக்கின்றோம் எனக்கு பிரச்சினை இல்லை என்று சகோதரனுக்கு சொல்லி இருக்கின்றார்.
ஆனால் பிரபாகரனின் கொள்கையின்படி ஆணிவேருடன் அறுப்பதுதான் அவருடைய கொள்கையாக இருந்ததாகவும் மாத்தையாவின் ஆட்கள் எவனையும் விட்டுவைக்காதே என்ற ரீதியில் களைகளுடன் பயிர்களும் அழிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்தச் சம்பவத்தில் பொன்னம்மானின் சகோதரரும் புலிகளின் பேச்சாளருமான யோகியும் கைதுசெய்யப்பட்டார். யோகி பிறேமதாசா புலிகள் பேச்சுவார்த்தையில் புலிகள் சார்பாக கலந்துகொண்டவர் ஆவார்.
பொன்னம்மான் நாவற்குழிவெடிவிபத்தில் கொல்லப்பட்டதினாலும் தலைமறைவுகாலங்களில் பிரபாகரன் யாழ் நாச்சிமார்கோவிலடியில் உள்ள பொன்னம்மான் வீட்டில் தங்கியதாகவும் இதனால் அந்த உறவுகாரணமாக பொன்னம்மானின் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க சில நிபந்தனைகளுடன் யோகி விடுதலை செய்யப்பட்டார்.
வன்னியில் இருந்து தப்பி ஓடிய கிட்டத்தட்ட 40 மாத்தையா விசுவாசிப் புலிகள் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் காடுகள் வழியாகத் தப்பி ஐனகபுர சிறிலங்கா இராணுவ முகாமில் தஞ்சமடைந்தனர்.
பின்னர் முகாம் பொறுப்பு அதிகாரி மேஜர் ஜானகப் பெரேரா மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ கட்டுப்பகுதியான கட்டுவன் மகாவித்தியாலத்தில் உள்ள இராணுவு புலனாய்வு முகாமில் தங்கவைக்கப்பட்டு சந்திரிகா அரசின் யாழ்குடநாட்டை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டனர்.
இவர்களின் உதவியோடு இராணுவம் யாழ்குடநாட்டை வெற்றிகரமாக கைப்பற்றியது. இவர்களினால் பல புலி உறுப்பினர்கள் மற்றும்விசுவாசிகள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையில் மற்ற தமிழ் இயக்கங்களையோ கட்சிகளையோ சந்திரிகா அரசு அனுமதிக்கவில்லை என்பதும் பின்னர் தலைமைதாங்கிய சிவக்குமார் என்ற புலிகள் இயக்க உறுப்பினர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது