வீடுகள் பல முற்றிலும் சேதமடைந்துள்ளன.
சில குடும்பங்கள் மிகக் கஷ்டமான நிலையை எதிர்கொள்கின்றன.
சில இடங்களில் மண்சரிவில் புதைந்தவர்கள் உள்ளனர். நிலைமை மோசமாக இருப்பதால் அவர்களின் உடல்களை மீட்கும் பணியும் சிரமமாக உள்ளது.
பலர் இன்னும் காணாமல் உள்ளதோடு, எத்தனை உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது கூட துல்லியமாக அறிய முடியாத நிலை.
1,200-க்கு மேற்பட்டவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
வீடுகளும் உடைமைகளும் அழிந்ததால் அவர்கள் இன்னும் வீட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
இளைஞர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
நேற்று இரவு ஒரு இடைத்தங்கல் முகாமில் இரவு உணவு வழங்கும் பணி கூட இரவு 11 மணி வரை நடைபெற்றது — முழுவதும் இளைஞர்களின் அர்ப்பணிப்பால்.
ஆனால்…
இந்தப் பேரழிவின் முழுமையான செய்திகள் இன்னும் எந்த முக்கிய ஊடகத்திலும் சரியாக தெரிவிக்கப்படவில்லை.
அதனால் உண்மையான நிலைமை பலருக்கு தெரியாமல் உள்ளது.
உதவிக்கரம் நீட்ட வேண்டுகிறோம்
நேசம் நிறைந்த மனிதாபிமானம் மிக்க அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாம் ஒன்றிணைந்து உதவி செய்வோம்.
உங்கள் சிறிய பங்களிப்புகளும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் எழச் செய்யும் சக்தியாக இருக்கும்.
நாம் ஒன்றாக இருந்தால் எந்த பேரிடரையும் கடந்து செல்ல முடியும்.
(Vijayaretthna Edwin)