பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

இந்த அவசர நிலையை முன்னிட்டு, இரத்த தானம் செய்ய தகுதியுடைய பொதுமக்கள் அனைவரும் உடனடியாக இரத்த வங்கிக்கு வருகை தந்து, உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபடுமாறு  கேட்டுக்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில், அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் ஏனைய மருத்துவ தேவைகளுக்காக தினசரி அதிக அளவில் இரத்தம் தேவைப்படுகிறது. தற்போதைய கையிருப்பு குறைவடைந்துள்ளமையானது, பல நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது.

“உங்கள் ஒரு துளி இரத்தம் பல உயிர்களைக் காக்கும்”

சமூகப் பொறுப்புடன் இந்த உன்னத பணியில் அனைவரும் கைகோர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மனிதநேயத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும் என்பதால், பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு உயிர்களைக் காக்க உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.