பொலிஸ் அதிகாரிகளை கட்டியணைத்தது ஏன்?

பத்திரிகை நிறுவனத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை ஹிருணிக்கா குறிப்பிட்டார்.

தமக்கு இருக்கும் அதே பிரச்சினை அவர்களுக்கும் உள்ளதாகவும் குண்டாந்தடிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களுடன் வரும் பொலிஸாரை அமைதியான முறையில் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளை ஹிருணிகா பிரேமச்சந்திர கட்டிப்பிடிப்பது அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் தந்திரோபாயமாக இருந்ததாக கறுவாத்தோட்ட பொலிஸாருடன் ஆஜரான உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

கொழும்பு 7 இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஹிருணிக்கா உள்ளிட்ட 15 பேர் கடந்த திங்கட்கிழமை  (14) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
பல சந்தர்ப்பங்களில், கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை கட்டிப்பிடிப்பதை  ஹிருணிகா பிரேமச்சந்திர வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் இது அவரது செயற்பாட்டு முறை (குற்றவியல் நடத்தை முறை) என பொலிஸார் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.