போதைப்பொருளுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

செவ்வாய்க்கிழமை(6) அன்று இரவு  அம்பாறை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது  மற்றுமொரு சந்தேக நபர்  இரவு 10.00 மணியளவில் அம்பாறை பாலிகா சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்களில் ஒருவர் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட   சந்தேக நபர்களிடமிருந்து 2101 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 8757 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

உகண 21 திஸ்ஸபுர பகுதியிலிருந்து அம்பாறைக்கு சிறிது காலமாக போதைப்பொருள் கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்களை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.