மட்டு நகரில் ஐஸூடன் இளைஞனான வியாபாரி கைது

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து கடந்த  புதன்கிழமை சீலாமுனை பகுதியில் வைத்து தலா 210, 140 மற்றும்180 மில்லி;கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 இளைஞர்களை கைது செய்தனர்.

அவர்கள் 7 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதியை பெற்று அவர்களிடம் மேற் கொண்ட விசாரணையில்   குறித்த போதை பொருள் வியாபாரி தொடர்பாக தகவல்களை வழங்கினர்.

இதையடுத்து பொலிஸ் போதை தடுப்பு ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மாறுவேடத்தில்  புதிய எல்லை வீதியில் சம்பவ தினமான சனிக்கிழமை (20) இரவு  கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வியாபாரத்துக்காக ஐஸ் போதை பொருளை எடுத்து வந்த இளைஞனை கண்ட பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்த வியாபாரியிடம் இருந்து 2 கிராம் 100  மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.