முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்

அதனால், “வளமான நாடு அழகான வாழ்வு” எனும் அரசின் தேசிய கொள்கைப் பணிச்சட்டதத்தின் கீழ் “மதிப்பு மிகுந்த சிரேஷ்ட பிரஜை அர்த்தமுள்ள ஓய்வு காலம்” எனும் நோக்கத்தை அடைவதற்கு இயலுமாகும் வகையில் முதியோர்களுக்கு சமூக, பொருளாதார, உடலியல் மற்றும் ஆன்மீக ரீதியாக திருப்திகரமாக வாழ்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 அதற்காக 2000 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.