இவர்களுடன் 5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகளும் இரண்டு மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களும் அடங்குவர்.
சந்தேக நபர்களால் திருடப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்கள், பிரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் முக்கிய சந்தேக நபரிடமிருந்து 10,300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.