யாழ்ப்பாணத்தில் 35 ஆவது தியாகிகள் தினம்.

பொதுச் செயலாளர் தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு விளக்கேற்றி ஆரம்பித்தததைத் தொடர்ந்து திருவுருவப்படங்களுக்கான மலர் மாலையினை தோழர் தியாகி ஜோசப்பின் தம்பி தோழர் தங்கராசா அணிவித்தாா்.

மற்றும் பொதுச்செயலாளர் தோழர் கிருபா, தேசிய அமைப்பு செயலாளர் தோழர் மோகன் அத்துடன் தோழர் அன்ரன் ஆகியோரும் மாலை அணிவித்தனர் . தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் திருவுருவப்படங்களுக்கு விளக்கேற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளரின் அஞ்சலி உரை இடம் பெற்றது. தொடர்ந்து தோழர் கா.கோபாலகிருஷ்ணன் (பனைஅபிவிருத்திச் சபையின் ஒய்வு பெற்ற விரிவாக்க முகாமையாளர் ) அவர்களால் வடக்கு கிழக்கு மக்களின் பெருளாதரமும் அவற்றை மேம்படுத்தும் வழிகளும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் சி.தங்கராசா (ரவி) அவர்களின் நன்றியுரையுடன் நண்பகல் 12 மணியளவில் இனிதே அஞ்சலிக் கூட்டம் நிறைவு பெற்றது