விமல், கம்மன்பிலவின் ஆசனங்களும் பறிப்பு?

ஆளுங்கட்சியின் முன்வரிசையில் 18ஆவது ஆசனத்தில் அமர்ந்திருந்த விமல் வீரவன்சவுக்கு 73ஆவது ஆசனமும், ஆளுங்கட்சியின் இரண்டாவது வரிசையின் 24ஆவது ஆசனத்தில் அமர்ந்திருந்த உதய கம்மன்பிலவுக்கு பின்வரிசையில் 78ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு ஆளுங்கட்சியின் முன்வரிசையில் 02ஆவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 67ஆவது ஆசனத்தில் அவர் அமர்ந்திருந்தார்.

போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திலும் அமுனுகமவுக்கு 39ஆவது ஆசனத்தில் இருந்து 30ஆவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கு 36ஆவது ஆசனமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 80ஆவது ஆசனத்தில் அவர் அமர்ந்திருந்தார்.

ஆளுங்கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களிலும் சிறிய மாற்றங்கள் ஏற்படுமெனவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர​ பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.