ஷானி அபசேகரவின் மீள் வருகை

வருகை தந்து செய்த முதல் வேலை மகிந்த வின் ஆடம்பர மாளிகையை சிஜடி அலுவலமகா மாற்ற சிபாரிசு செய்தது

ஷானி அபேசேகரவின் இரண்டாவது இன்னிங்ஸ் – ஒரு பார்வை

ஷானி அபேசேகரவின் “இரண்டாவது இன்னிங்ஸ்” என்பது, ராஜபக்சேக்களின் சாம்ராஜ்யம் அவரை ஒரு குப்பையைப் போலத் தூக்கி எறிந்த பிறகு, அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பதைக் குறிக்கிறது

எந்த ராஜபக்சேக்கள் அவரைப் பழிவாங்கினார்களோ, அதே ராஜபக்சேக்களின் கதையை முடிக்க அதே அதிகாரி திரும்பி வந்திருக்கிறார். இது ஒரு “சக்தி வாய்ந்த கர்ம வினை” என்று வர்ணிக்கப்படுகிறது.

ஷானியின் அடையாளம் மற்றும் திறமைகள்:

• “ஷெர்லாக் ஹோம்ஸ்”: இலங்கை பொலீஸ் திணைக்களத்தில் “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்று அழைக்கப்படும் ஒரு கீர்த்திமிகு பொலீஸ் அதிகாரி ஷானி அபேசேகர.

• நிஜ சாதனையாளர்:

அவர் ஒரு திரைப்பட கதாபாத்திரம் அல்ல, நிஜ சாதனையாளர். குற்றப் பின்னணி கொண்ட திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு நமக்கு இருக்கும் அலாதி விருப்பத்தைப் போலவே, ஷானியின் நிஜ வாழ்க்கையும் திகில் நிறைந்ததாக உள்ளது.

• அர்ப்பணிப்புள்ள சேவை:

1986 ஆம் ஆண்டில் சப் இன்ஸ்பெக்டராக பொலீஸ் திணைக்களத்தில் சேர்ந்த ஷானி, ஆரம்பத்தில் போலீஸ் விசேட அதிரடிப்படையிலும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலும் பணிபுரிந்தார். அவரது அப்பழுக்கற்ற துணிச்சல் மிகு சேவை அவரை 1999 ஆம் ஆண்டில் சிஐடிக்கு உள்ளீர்க்க வைத்தது.

• நேர்மை மற்றும் சமரசமற்ற தன்மை: சந்திரிகா முதல் கோட்டாபய வரை எந்த ஒரு தலைவருடனும் அவர் சமரசம் செய்து கொண்டதில்லை. அப்படிச் செய்திருந்தால், இலங்கை போன்ற ஒரு தேசத்தில் பில்லியன்களை ஈட்டியிருக்கலாம்.

• எளிமையான வாழ்க்கை: வெறும் ஒரு அறை கொண்ட 550 சதுர அடி வீட்டிலேயே ஷானி வசிக்கிறார்.

• அஞ்சா நெஞ்சன்: இலங்கையில் உள்ள 99 வீதமானோரால் கைவைக்க முடியாது என்று நம்பப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் மீதும் கைவைத்தவர் ஷானி. ரனில் உட்பட 90 சதவீத அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஷானிக்கும் அவர் வழியில் செல்லப்போகும் நேர்மையான பொலீஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படலாம், ஆனால் இது ஷானியின் சர்வீஸில் புதிய விஷயம் அல்ல.

ஷானி அபேசேகர விசாரித்த முக்கிய வழக்குகள்:

ஷானி அபேசேகரவின் விசாரணைகள், இலங்கை மக்களுக்கு அவர் யார் என்பதைப் புரியவைக்கும் அளவுக்கு அமைந்தன. அவர் பல உயர்மட்ட குற்ற வழக்குகளை விசாரித்தவர்:

• பத்திரிகை ஆசிரியர் ரோகணகுமார படுகொலை:

பத்திரிகை ஆசிரியர் ரோகணகுமார் படுகொலையின் சூத்திரதாரி பாதாள உலக தாதா பத்தகானே சஞ்சீவா என்று ஷானி அபேசேகர கண்டுபிடித்தார். ஆனால் விசாரணை உடனடியாக நிறுத்தப்பட்டது.

• ஈவான் ஜான்ஸ் படுகொலை (ராயல் பார்க்):

2005 ஆம் ஆண்டு ராஜகிரிய ராயல் பாக்கில் நடந்த ஸ்வீடன் யுவதியான ஈவான் ஜான்ஸ் படுகொலையின் பின்னணியை சாட்சியே இல்லாமல் விசாரித்து, டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் கைரேகைகள் மூலம் குற்றவாளி ஜூட் மஹா என்பவனைக் கைது செய்தார்.

• ஷியாம் படுகொலை: பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் ஷியாம் படுகொலையில் டிஐஜி வாஸ் குணவர்தனவை உள்ளே தள்ளிய பெருமையும் ஷானியையே சேரும்.

• பல முக்கிய குற்றங்கள்: சண்டையிலீட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை, பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை, உடத்தளவின முஸ்லிம் இளைஞர்கள் கொலை, பாரத லட்சுமன் கொலை, 11 தமிழ் மாணவர்கள் கொலை, வசீம் தாஜுதீன் கொலை, குடிதண்ணீர் கேட்டு போராடிய ரத்து பஸ்பல மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டின் பின்னணி, ஊடகவியலாளர்களான போதல ஜயந்தர் மற்றும் கீத் நோயர் போன்றோரின் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையை ஒரு பாதாள தேசமாக்கிய அத்தனை குற்றங்களின் பைல்களும் ஷானி திறந்தவைதான்.

ஷானியின் முந்தைய சவால்களும் பழிவாங்கல்களும்:

• நல்லாட்சி காலத்தில் புறக்கணிப்பு: 2015-19 ஆம் ஆண்டு கால “நல்லாட்சி” காலத்தில் ஷானி அபேசேகர சிஐடி பணிப்பாளராய் நியமிக்கப்பட்ட போதிலும், அன்றைய ஆட்சியாளர்கள் அவருக்குக் கடமையைச் செய்யச் சரியாய் ஒத்துழைக்கவில்லை. மத்திய வங்கி கொள்ளை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப் போய் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவால் விரட்டப்பட்டார்.

• கோட்டாபயவின் பழிவாங்கல்: 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச வென்றதற்குப் பிறகு, அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்திய பொலீஸ் உயரதிகாரிகள் தூக்கி பந்தாடப்பட்டார்கள். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகிப் பதவிப் பிரமாணம் எடுத்ததும், பிரதமரையும் கேபினெட்டையும் நியமிப்பதைத் ஒத்திபோட்டுவிட்டு, ஷானியை அப்படியே தூக்கி இடமாற்றம் செய்ததுதான் முதல் காரியம். ஷானி அப்போது 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பானது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஒரு சதி வலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

• பதவி இறக்கம் மற்றும் சிறை: ஷானியை காலிக்கு இடமாற்றம் செய்து, கடிதம் பிரிக்கும் ஒரு பியோன் தரத்துக்கு மிதித்து எரியப்பட்டார். ஷானி மற்றும் சிஐடி அதிகாரிகளின் இடமாற்றங்களால் ஈஸ்டர் உட்பட மொத்த குற்ற விசாரணைகளும் நிலை குலைந்து போயின. ராஜபக்சேக்களும் எடுபிடிகளும் அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுதலையானார்கள். வேறு வழியின்றிப் பணி ஓய்வு பெற்ற ஷானியை கோட்டாபய விடவில்லை; வாஸ் குணவர்த்தனவின் கேசை மையமாக வைத்து சேவை இடை நிறுத்தம், மூன்று வருடம் ஆறு மாதம் ஓய்வூதியம் இடை நிறுத்தம், 10 மாத சிறை என்று பழிவாங்கல் தொடர்ந்தது.

• ரனிலின் பாராமுகம்: கோட்டாபய மக்கள் எழுச்சியால் தப்பியோடிய பிறகு, ரனில் ஜனாதிபதியான போதும் ஷானி விஷயத்தில் பாராமுகமாகவே இருந்தார். கோட்டாபய காலத்தில் மூடப்பட்ட எந்த ஒரு கோப்பும் திறக்கப்படவே இல்லை.

இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கம் மற்றும் நகர்வுகள்:

• அனுர குமார திசாநாயக்கவின் ஆதரவு:

யாரோடு சேர்ந்தால் கணக்கு தீர்க்க முடியுமோ அவர்களோடு சேரத் தீர்மானித்த ஷானி, ஜனாதிபதி தேர்தலின் பிரச்சாரங்கள் உச்சம் பெற்றிருந்த வேளை, ஓய்வு பெற்ற பொலீஸ் அதிகாரிகள் என்ற விசேட மாநாட்டைக் கூட்டி, அதற்குத் தலைமையேற்று அனுர குமார திசாநாயக்கவுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார்.

• மீண்டும் சிஐடி பணிப்பாளர்:

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியால் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் போலீஸ் சபைக்கு அழைக்கப்பட்ட ஷானி அபேசேகரவுக்கு குற்றப் புலனாய்வு பகுப்பாய்வு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்தப் பணியை மிகத் திறம்பட முடித்த ஷானி, மீண்டும் சிஐடி பணிப்பாளராக அனுரவுக்கு சல்யூட் அடித்துத் திரும்பினார்.

• ராஜபக்சே கோட்டையில் முதல் அடி: ஷானியின் முதல் நகர்வு ராஜபக்சேக்களின் கோட்டையிலேயே விழுந்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் ஏக்கர் கணக்கான ஆடம்பர பங்களா இனி இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன் புதிய தலைமை அலுவலகமாக மாறப்போகிறது. இது “இனி உங்களின் கோட்டைக்குள்ளிருந்தே உங்களை வேட்டையாடுவோம்” என்கிற ஒரு ஸ்மார்ட்டான ராஜதந்திரச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது

• அரசியல் தலையீடு இல்லை என்ற நம்பிக்கை: எந்த ராஜபக்சேக்களால் ஷானி பழிவாங்கப்பட்டாரோ, அதே ராஜபக்சேக்கள் 1970-க்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றில் போட்டியிட முடியாத அளவுக்கு ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் நிலையில், ஷானி தனது வேலையைத் தொடங்கியிருக்கிறார். இந்த முறை எந்த அரசியல் தலையீடும் இருக்காது என்று நம்பலாம்.

தற்போதைய சவால்கள் (இரண்டாவது இன்னிங்ஸில்):

ஷானி அபேசேகரவின் முன்னால் இரண்டு பிரம்மாண்டமான சவால்கள் காத்திருக்கின்றன:

1. பாதாள உலக கும்பல்களை விசாரிப்பது:

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு சிஐடி காவலில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்கள், தாங்கள் அரசியல்வாதிகளின் ஏவல் நாய்களாகச் செயல்பட்டதாகவும், யாருக்காக வேலை செய்தோம் என்ற உண்மைகளை கக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இவர்களின் வாக்குமூலங்கள் இலங்கையின் பலம்பெரும் தலைவர்களின் முகத்திரையை கிழிக்கப்போகின்றன.

2. ஹன்சீர் அசாத் மௌலானாவை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவது: ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் முக்கிய சாட்சியான ஹன்சீர் அசாத் மௌலானாவை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவது இரண்டாவது மற்றும் இதைவிடப் பெரிய சவால். இந்தத் தாக்குதல் ஒரு அரசியல் சதி என்று மௌலானா அளித்த வாக்குமூலம் இலங்கையின் சரித்திரத்தையே மாற்றக்கூடியது. மௌலானா சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதால், அவரை நாட்டுக்கு அழைத்து வருவது சற்று சிக்கலான விவகாரம். இருப்பினும், சிஐடி இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

ஷானி தனது பாணியில் ராஜபக்சேக்களுக்கு சவால் விட தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன….