10,000 பொலிஸ் அதிகாரிகளை இணைக்கத் திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் மையப்படுத்தி சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை தடுப்பதனூடாக போதைப்பொருள் பாவனையை குறைக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் சுற்றிவளைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.