14 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைத்தொடர்பு கோபுர பெற்றரிகள் 44 மீட்பு

கைப்பற்றப்பட்டுள்ள பேட்டரி ஒன்றின் பெறுமதி சுமார் 30,000 என தெரிய வருகிறது இதன்படி சுமார் 14 லட்சம் ரூபாய் பெறுமதியான பெற்றரிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

பெரியபோரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து திருடப்பட்ட 24 பெற்றரிகளும் சம்மமாந்துறை தொலைதொடர்பு கோபுரங்களிலிருந்து திருடப்பட்ட 20 பெற்றரிகளும் கிடைக்கப் பற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள பெற்றரிகளும் குறித்த சந்தேக நபர்களும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்