ஆனால் நான் அங்கு ஜனாதிபதியுடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று (09) மாலை சர்வமதக் குழு, பொது அமைப்புக்கள், போராட்டக் குழு ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியைச் சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினேன். எனினும், அரசாங்கத்தின் நிலைப்பாடு அந்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் திட்டமிட்டபடி அமைக்க வேண்டும் என்பதே. அதில் அவர்கள் மிகவும் திடமாக இருக்கின்றார்கள் என்றார்.