2.5 மில்லியன் டொலர் கொள்ளை குறித்து IMF அவதானம்

இது தொடர்பாக பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப்பேச்சாளர்,  வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்புக்குள் அத்துமீறி நுழைந்ததை உறுதிப்படுத்தி நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையைத் தாம் அறிந்திருப்பதாகவும், இந்த முக்கிய நகர்வை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு வழங்க வேண்டிய கடன் தவணையைச் செலுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றது.

ஏற்கனவே 46 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த முடியாமல் இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply