2026 உ/த பரீட்சை : ஏப்ரல் 24 வரை விண்ணப்பிக்க அவகாசம்

விண்ணப்பிக்கும் முறைமை

அனைத்து விண்ணப்பதாரர்களும் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

பாடசாலை விண்ணப்பதாரர்கள்: அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லை (Password) பயன்படுத்த வேண்டும்.

தனியார் விண்ணப்பதாரர்கள்: தனிப்பட்ட ரீதியில் இணையதளம் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்வதற்குத் தமது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.

முக்கிய அறிவுறுத்தல்கள்

விண்ணப்பங்களை இணையதளம் ஊடாக சமர்ப்பித்த பின்னர், பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இருவரும் அதன் பிரதியொன்றை (Printout) எடுத்து, எதிர்கால தேவைகளுக்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எக்காரணம் கொண்டும் காலக்கெடுவுக்குப் பின்னரான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதால், ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.