29 ஆம் ஆண்டு நினைவேந்தல்

வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்ப்பாட்டின் இந்த நிகழ்வு செம்மணி சந்துப் பகுதியில் காலை 9.30 மணிக்கு நடந்தது.

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். 

அத்தோடு “வாசலிலே கிருசாந்தி” எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது

மேலும் இந்த நினைவேந்தலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.