300 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் அழிப்பு

கடந்த 2021ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.

குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, அவற்றை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து போதைப்பொருள் தொகை பொறுப்பேற்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வனாத்தவில்லுவ பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அழிக்கப்பட்டன.