ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் எஸ்.சி. ரோஷன் தலைமையில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.
னாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு 36 மில்லியன் ரூபா நிதியிலான பணப் பரிசிக்களும் மற்றும் கெளரவம் வழங்கப்பட்டன.